• May 05 2024

வாத்தி இசை வெளியீட்டு விழாவில் பட்டு வேஷ்டி சட்டையில் மகன்களுடன் கெத்து காட்டிய தனுஷ்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை என்ற படம் மூலமாக நடிகராக அறிமுகமான தனுஷ் தற்போது நடிகர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர், தயாரிப்பாளராகவும் திகழ்கிறார்.


தமிழ், ஹிந்தி பட படங்கள் நடித்துவந்த தனுஷ் ஹாலிவுட் வரை சென்று கலக்கியிருக்கிறார். அடுத்தடுத்தும் அவரது நடிப்பில் நிறைய படங்கள் வர உள்ளது.தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி உள்ள வாத்தி என்ற படத்தில் வாத்தியாராக பாலமுருகன் என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர்கள் தவிர, சமுத்திரக்கனி, சாய்குமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.


ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக சென்னையில் நடந்துள்ளது.இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் தனது மகன்கள் மற்றும் அம்மாவுடன் வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அவரின் 2வது மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள். 


Advertisement

Advertisement

Advertisement