• Apr 30 2024

சிம்புவிடமிருந்து வட சென்னை படவாய்ப்பை தட்டிப் பறித்த தனுஷ்- இதுவரை வெளிவராத ரகசியம்- இப்படியொரு மாஸ்டர் பிளான் இருக்கா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான இயக்குநராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான விடுதலை படத்தின் முதல் பாகம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அதேநேரம் விடுதலை படத்தின் கதை குறித்தும் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், விடுதலை இரண்டாம் பாகம் வெளியானதும் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

 இன்னொரு பக்கம் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். வடசென்னை படத்தின் முதல் பாகம் கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில்  தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். முதல் பாகத்தில் தனுஷின் கேரக்டருக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் இல்லையென்றாலும், இரண்டாம் பாகம் அன்புவின் எழுச்சி என அவரது போர்ஷன் தான் அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது.


 இதனால் தனுஷ் ரசிகர்கள் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.முன்னதாக வட சென்னை படத்தில் சிம்பு தான் ஹீரோவாக நடிக்கவிருந்தாராம். பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தபோதே வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் தனது முதல் படமான பொல்லாதவனில் தனுஷை ஹீரோவாக்கினார் வெற்றிமாறன். அதேநேரம் முன்னணியில் இருந்த சில ஹீரோக்கள் வெற்றிமாறன் மீது நம்பிக்கையில்லாமல் அவரிடம் கதை கூட கேட்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. பொல்லாதவன் படத்தின் வெற்றிதான் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியை பலப்படுத்தியது.


பொல்லாதவனை தொடர்ந்து ஆடுகளம், வட சென்னை, அசுரன் படங்களிலும் இந்த வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது. விசாரணை படத்தில் மட்டுமே தனுஷ் நடிக்கவில்லை. வெற்றிமாறன் படங்களில் நடித்தால் தனக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைப்பதை புரிந்துகொண்ட தனுஷ், அவரை தனது கம்ஃபர்ட் ஜோனில் வைத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதற்காக வெற்றிமாறன் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்தபோதே அவருக்கு முக்கியமான நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் கொடுத்து உதவியுள்ளார் தனுஷ்.


இதனால் தனது படத்தில் ஹீரோவாக நடிக்க தனுஷை தான் முதல் சாய்ஸாக வைத்துள்ளார் வெற்றிமாறன். ஆனால், கதையை பொறுத்து யாரை நடிக்க வைக்கலாம் எனவும் வெற்றிமாறன் முடிவு செய்வதுண்டு. அதன்படி வட சென்னை திரைப்படத்தை முதலில் சிம்பு, விஜய் சேதுபதி காம்போவில் தான் எடுக்க நினைத்துள்ளார் வெற்றிமாறன். ஆனால், இந்தக் கூட்டணி சக்சஸ் செய்துவிட்டால் இனி நமது நிலை கஷ்டம் தான் என, வெற்றிமாறனை சிம்பு பக்கம் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டாராம் தனுஷ். அதன்பின்னரே வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவானது வட சென்னை. இன்னொரு பக்கம் கால்ஷீட் பிரச்சினையால் விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement