• May 02 2024

மாஸ்டர் பிளானுடன் திடீர் என ஹைதராபாத் சென்ற தனுஷ்..! ஏன் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ்  என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். 


மேலும் இவர் 2002 ஆம் ஆண்டு முதல் திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை,வேலையில்லா பட்டதாரி, அசுரன் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.


மேலும் இவர் 40க்கும் மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 14 தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள் என பல விருதுகள் வென்றார்.


இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் நடிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தனுஷ் தற்போது 'வாத்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார்.


இதை தொடர்ந்து தற்போது, தனுஷ் மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட, கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். 


இதனை தொடர்ந்து அடுத்த படத்திற்காக ஆயத்தமாகியுள்ளார் தனுஷ். பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் மூன்று மொழிகளில் நடிக்க உள்ள படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் மிக பிரமாண்டமாக போடப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக தனுஷ், ஹைதராபாத் பறந்துள்ளார். ஹைதராபாத்தில் ஏர்போர்ட்டில் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்....




Advertisement

Advertisement

Advertisement