• Mar 09 2026

நான்கும் நான்கு விதம்.. தனுஷ் ஒரு சூப்பர் இயக்குனர் என்பதை நிரூபித்துவிட்டாரா? ’ராயன்’ புதிய ஸ்டில்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்து இயக்கி வரும் அவரது ஐம்பதாவது படமானராயன்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் மேற்கண்ட 4 நட்சத்திரங்களின் போஸ்டர்கள் வரிசையாக ஒவ்வொரு நாளாக வெளியானது. பிளாக் அண்ட் ஒயிட்டில் இருந்தாலும் இந்த போஸ்டரில் இருந்த நட்சத்திரங்கள் வித்தியாசமான லுக்கில் இருந்தனர் என்பதும் குறிப்பாக எஸ்ஜே சூர்யா ஆள் அடையாளமே தெரியாமல் அசத்தலாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



நான்கு பேருமே திறமையான நட்சத்திரங்கள் என்றாலும் இதுவரை அவர்கள் நடித்திராத வித்தியாசமான கேரக்டர்களில் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது இந்த நான்கு போஸ்டரில் இருந்தே தெரிய வருகிறது.

ஏற்கனவே கடந்த மூன்று நாட்களாக எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் ஆகியவர்களின் ஸ்டில்கள் வந்த நிலையில் சற்றுமுன் துஷாரா விஜயன் ஸ்டில் வந்துள்ளது என்பதும் வித்தியாசமாக இருக்கும் இந்த ஸ்டில்களை பார்க்கும் போதே தனுஷ் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்து விட்டார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில் தனுஷின் ஐம்பதாவது படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்பதை ஒவ்வொரு தெரிந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement