• May 03 2024

மரண மாஸ் கொடுக்க காத்திருக்கும் தனுஷ்.... வெளியானது "கேப்டன் மில்லர்" ரிலீஸ் திகதி....

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் விறுவிறுப்பான கதைக்களத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் 'கேப்டன் மில்லர்'. இத்திரைப்படத்திற்க்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார், இப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ரிலீஸ் தொடர்பான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


இரண்ட பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம்  1940களில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதன் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.


இந்த படத்தில் கதாநாயகியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார்.இவர்களுடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.  இந்நிலையில் தனுஷ் ரசிகர்களுக்கு அடுத்த சந்தோசமான செய்தியை படக்குழு அறிவித்துள்ளது.


ரசிகர்களிடத்தில் நல்ல எதிர்பார்ப்போடு இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 திகதி திரைக்கு வரவிருக்கிறது. இது தனுஷ் ரசிகர்களுக்கு குதூகலமான செய்தியாகவே அமைகிறது.  



Advertisement

Advertisement

Advertisement