• Apr 26 2024

லோகேஷ் கனகராஜின் ஃபார்முலாவைப் பின்பற்றும் தனுஷ்- மிரட்டும் D50 காம்போ

stella / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிஸயாக நடித்த வருகின்றார். இதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது

அதேநேரம் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் D 50 படத்தை இயக்கவும் தனுஷ் ரெடியாகிவிட்டார். ஏற்கனவே பவர் பாண்டி படத்தை இயக்கிய தனுஷ், இரண்டாவதாக D 50 படத்தை இயக்கவுள்ளார். இதில், அவரே ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்தப் படம் வடசென்னை பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாம். தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை 2ம் பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.


இதனிடையே இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைப்பார் என சொல்லப்பட்ட நிலையில் திடீரென அவர் மறுத்துவிட்டாராம். இதனால் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானை கமிட் செய்துவிட்டார் தனுஷ். சன் பிக்சர்ஸ், ஏஆர் ரஹ்மான், தனுஷ் என ஆரம்பமே அமர்க்களமாக, இப்போது இன்னும் சில பிரபலங்கள் D 50 படத்தில் இணைந்துள்ளனர்.

அதன்படி, எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோர் தனுஷின் சகோதரர்களாக நடிக்கவுள்ளார்களாம். ஏற்கனவே விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம் கமிட்டாகிவிட்ட நிலையில், தற்போது எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷனும் இணைந்துள்ளனர்.அதேபோல், துஷாரா விஜயனும் லீடிங் ரோலில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கேப்டன் மில்லர் படப்பிடிப்பு முடிந்ததும், D50 ஷூட்டிங் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மல்டி ஸ்டார்ஸ் படங்களில் லோகேஷ் தான் கோலிவுட்டின் தனி அடையாளமாக இருக்கிறார். மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து தான் இயக்கும் படங்களில் பெரும் நட்சத்திரப் பட்டாளங்களோடு களமிறங்குகிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது அதே ஃபார்முலாவில் தனுஷும் தனது 50வது படத்தை இயக்கவுள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement