• Sep 09 2024

ஷாருக்கானை கட்டிப் பிடித்து முத்தமிட்ட தீபிகா- ஜவான் சக்சஸ் மீட்டில் நடந்த சம்பவம்- வைரலாகும் வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!

ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் படங்களை கோலிவுட்டில் இயக்கிய அட்லி பாலிவுட்டில் அதுவும் ஷாருக்கான் படத்தை பண்ணிவிட்டு தான் திரும்புவேன் என மும்பைக்கு கிளம்பிச் சென்றார்.

சுமார் 4 ஆண்டுகள் அதற்காக அட்லி செலவிட்ட நிலையில், அதற்கான பலன் தற்போது அவருக்கு கைமேல் கிடைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை பிரியாமணி, மற்றும் சில பாலிவுட் நடிகர்களை வைத்து ஜவான் படத்தை கருத்து மற்றும் கமர்சியல் எண்டர்டெயினர் திரைப்படமாக கொடுத்துள்ளார். 


கடந்த செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை அதிகாரபூர்வமாக 696.67 கோடி ரூபாயை வசூலித்து இருப்பதாக ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் மற்றும் இயக்குநர் அட்லி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் இப்படத்திற்கான சக்ஸஸ் மீட் நடந்தது. இதில் ஷாருக்கான், அட்லி, தீபிகா படுகோன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.அப்போது தீபிகா ஷாருகானை கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement