• Apr 17 2026

ரசிகர் மனதை கொள்ளையடித்த" டியர் " திரைப்பட பாடல்.... செம ஹிட் பாடல் போல...

Kamsi / 2 years ago

Advertisement

Listen News!

 தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும், தற்போது இயக்குனராகவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் தான்  ஜி வி பிரகாஷ். இவர் சாம் ஆண்டன் இயக்கிய 'டார்லிங்' என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார்.


தற்போது 'செத்தும் ஆயிரம் பொன்' படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும்  திரைப்படம் 'டியர்'. மேலும் இந்த படத்தில், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, 'தலைவாசல்' விஜய், கீதா கைலாசம், 'பிளாக் ஷீப்' நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


 இந் நிலையில் இத் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி, பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'தலவலி' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. விண்ணுலக கவி எழுதியுள்ள  இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




Advertisement

Advertisement