• Sep 22 2023

தியேட்டரில் பட்டைய கிளப்பும் டிடி ரிட்டர்ன்ஸ் ...இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் விபரம்!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக இருந்து சந்தானம் நடிப்பில் திகில் கலந்த நகைச்சுவையுடன் இதற்கு முன் வெளிவந்த தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்றது.

அதை தொடர்ந்து தற்போது சந்தானம் நடிப்பில் திகில் கலந்த நகைச்சுவையுடன் உருவாகி கடந்த 28ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் டிடி ரிட்டர்ன்ஸ் .

எஸ். பிரேம் ஆனந்த் இயக்கிய இப்படத்தில் சுரபி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் DD Returns நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியுள்ளது.

இந்த வசூல் சந்தானத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஒப்பனிங் என்றும், DD Returns படத்தின் மூலம் சந்தானம் மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement