• May 07 2024

பூந்தி செய்யத் தெரியாமல் முழிக்கும் மதுரை முத்து... ஷகிலாவின் கழுத்தைப் பிடித்த புகழ்... அட்டகாசமான 'CWC ' ப்ரோமோ வீடியோ..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ரசிகர்களின் ஒட்டு மொத்த வரவேற்பையும் பெற்ற ரியாலிட்டி ஷோவாக உள்ளது 'குக்வித் கோமாளி' நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியானது 3சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் நான்காவது சீசன் நடைபெற்று வருகின்றது.


அந்தவகையில் இந்த வாரம் சீசன் 2வில் குக்குகளாக இருந்த ஷகிலா, மதுரை முத்து, தீபா சங்கர், தர்ஷா குப்தா, ரித்திகா ஆகியோர் தற்போது சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்த பாலாவும் மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கிறார். இதனால் இந்த வாரம் காமெடி கலாட்டாக்களுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் இந்த வாரம் நடக்கும் அட்வான்டேஜ் டாஸ்க்கில் லட்டு செய்ய சொல்லி தற்போது நடுவர்கள் அறிவுறுப்பு ஒன்றினை வழங்கி இருக்கின்றனர். மேலும் கடலைமாவை கொடுத்து பின்பு அதை பூந்தியாக போட்டு பின்னர் சர்க்கரை பாகு போட்டு பூந்திகளை லட்டுகளாக உருட்டி எடுத்து வர வேண்டும் என்று நடுவர்களால் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. 


அந்த சமயத்தில் மதுரை முத்து பூந்தியை எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அந்நேரம் அங்கு வரும் ஷகிலா கடலை மாவை வைத்து தான் பூந்தியே செய்ய வேண்டும், பின்னால் லட்டு செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். அதுமட்டுமல்லாது புகழ் ஷகிலாவின் கழுத்தை பிடித்து வாய்ஸை எப்படி மாற்றுவது என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த சமயத்தில் அங்கு வரும் வெங்கடேஷ் பட் "என்ன தைரியம் இருந்தால் நீ சகிலாவின் கழுத்தை பிடிப்பாய்" என்று கேட்க அதற்கு புகழ் காமெடியாக "என் தாயின் கழுத்தை நான் பிடிக்க கூடாதா" என்று புகழ் சொல்ல உடனே பட் புகழை சப்பாத்திக்கட்டையால் அடிக்கிறார். 

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement