விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. யார் வெற்றி பெற போகிறார் , யார் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிரடியான அடுத்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் ப்ரோமோவில் "கும்பலா இருந்து 2 பேரை அட்டாக் பண்ணும்போது அது நல்லா இல்லை" என்று பவித்ரா சொல்கிறார். "யாரு நிறைய பாய்ண்ட் வச்சி இருக்காங்கனு பாரு பவி" என்று ஜாக்குலின் சொல்கிறார்." நான் எல்லாருடைய போடையும் தான் பிடிங்கினேன்" என்று பவி சொல்கிறார். "அது பாக்குறவங்களுக்கு தெரியும்" என்று ரயான் சொல்கிறார்.
இதனிடையே முத்து "நாங்க பேசும் போது ஏன் இடையில் பேசுற" என்று ரயானை பார்த்து சொல்ல அதற்கு ரயான் "பொதுவா இருந்து தான் பேசுரம் அப்போ எப்படி பேசவேனா என்று சொல்ல முடியும். உங்களுக்கு வேணும் என்றால் தனியா போய் பேசுங்க" என்று கூறுகிறார். "யாரும் யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டாம். அவங்க அவங்க கேம் விளையாடுங்க" என்று முத்து சொல்கிறார்.
மேலும் "பேர், அன்பேர் என்று ஒன்று இதுக்கு முன்னாடி இருந்துச்சி இப்போ எங்க போச்சினே தெரியவில்லை" என்று ரயான் சொல்கிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. இந்த வாரம் டிக்கெட் டூ பின்னாலி யார் வெல்ல போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!