• May 08 2024

பிரம்மாண்டமாக நடந்த Mr and Mrs சின்னத்திரை... டைட்டில் வின்னர் இந்த ஜோடியா.. குவியும் வாழ்த்துக்கள்.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே எப்போதும் சூப்பர்ஹிட் ஆகவே இருக்கும். அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் 'Mr and Mrs சின்னத்திரை'. மற்ற நிகழ்ச்சிகளைப் போலவே இந்நிகழ்ச்சிக்கும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு.


இந்நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஆனது தற்போது வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்த பைனல் போட்டியில், ஒவ்வொரு ஜோடியும் மிகக் கடுமையாகவே போட்டியிட்டு இருந்தனர். 

மேலும் இந்த பைனல் போட்டியில் கடுமையாக போட்டியிட்ட Mr and Mrs சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக மகாலிங்கம் - ராஜேஸ்வரி ஜோடி தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி ரூ. 3 லட்சம் வெற்றி தொகையாகவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்த மஹாலிங்கம் என்பவர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது அண்மையில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தில் இடம்பெற்ற சோழா சோழா என்ற பாடலை கூட இவர் தான் தனது குரலில் பாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் டைட்டில் வின்னராக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட மதன் - ரேஷ்மா ஜோடி இரண்டாவது இடத்தையும், ஃபரினா - ரஹ்மான் மற்றும் வசந்த் - ரேகா ஜோடிகள் மூன்றாவது இடத்தையும் பிடித்து வெற்றி ஈட்டியுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement