• May 18 2024

முதல்முறையாக மஞ்சு வாரியர் செய்த செயல்-குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சென்டிமீட்டர்'. இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் முதன்மை கதாபாத்தில் நடித்துள்ளார்.

மேலும் இவருடன் முக்கிய வேடங்களில் யோகிபாபு, காளிதாஸ் ஜெயராம், ஷைலி கிஷன் ஆகிய முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் மற்றும் சந்தோஷ் சிவன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற மே 20-ஆம் தேதி வெளியாக இருக்கிறது .

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர். “கிம் கிம்” என தொடங்கும் இந்த பாடலை இயக்குநர் முருகதாஸ் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு ராம் சுரேந்தர் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலின் மூலம் முதல்முறையாக தமிழில் மஞ்சு வாரியர் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement