• Apr 27 2024

இவரைத் தான் காதலிக்கிறேன் என உறுதிப்படுத்திய மஞ்சிமா மோகன்-குவியும் வாழ்த்து..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகியிருந்தாலும் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வரும் பல நடிகர்கள் இருக்கின்றனர். இவ்வாறு நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் என்ற அடையாளத்துடன் கடல் என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் கெளதம் கார்த்திக்.


இப்படத்தினை பிரமாண்ட இயக்குநர் இயக்கியிருந்ததோடு இசையமைப்பாளரான AR ரஹ்மான் இசையமைத்திருந்தாலும் எதிர்பார்த்த அளவு இத்திரைப்படம் வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ரங்கூன் திரைப்படம் நல்லதொரு அடையாளத்தை இவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.


அத்தோடு தற்பொழுது நடிகர் சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில்  கௌதம் கார்த்திக் உடன் தேவராட்டம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை மஞ்சிமா மோகன். அப்படத்திற்கு பிறகு இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து சொல்லப்பட்டது, ஆனால் அவர்கள் ஏதும் வாய் திறக்காமல் இருந்து வந்தனர்.


இதற்கிடையே தற்போது நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் தங்களின் இன்ஸ்டா பக்கத்தில் அவர்களின் காதல் உறவை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர். 

இதோ அந்த பதிவு...



Advertisement

Advertisement

Advertisement