தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனது அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகை பிரணிதா சுபாஷ், தற்போது தனது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது வாழ்க்கையின் முக்கிய தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

2021ஆம் ஆண்டு தொழிலதிபர் நிதின் ராஜுவை எளிமையான முறையில் திருமணம் செய்துக்கொண்டார் பிரணிதா. பின்னர் 2022ஆம் ஆண்டு அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு “அர்ணா” என பெயர் வைத்து அன்புடன் வளர்த்து வருகிறார். மேலும், 2024ஆம் ஆண்டு ஆண் குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது மூத்த மகள் அர்ணாவின் 4வது பிறந்தநாளை மிகுந்த விமர்சையாகக் கொண்டாடியுள்ளார் பிரணிதா. குழந்தைக்கு பிடித்த தீம் அடிப்படையில் அலங்கரிக்கப்பட்ட இந்த விழாவில், குடும்பத்தினரும் நெருங்கியவர்களும் கலந்து கொண்டு கொண்டாட்டத்தை சிறப்பித்தனர்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அழகான தருணங்களை அவர் வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அம்மா-மகள் உறவு, மகிழ்ச்சி மற்றும் குடும்பத்தின் நெருக்கம் அழகாக பிரதிபலிக்கிறது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களின் பாராட்டுகளை குவித்து வருகிறது.
Listen News!