• Apr 28 2024

தளபதி 67 படத்திற்கு இத்தனை கோடி தர வேண்டும்-திடீரென சம்பளத்தை உயர்த்திய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் லோகேஷ் கனகராஜ். இப்படத்தைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான கார்த்தி மற்றும் விஜய்யை வைத்து கைதி மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

இப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து கமல்ஹாசனை வைத்து பான் இந்தியப் படமாக விக்ரம் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி தற்போது வரை உலகளவில் ரூ.320 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருக்கிறது.

விக்ரம் படத்தின் மூலம் தனக்கென ஒரு LCU என்ற Universe-யை தொடங்கியுள்ளார் லோகேஷ். இனி வரும் திரைப்படங்களில் இதனை விரிவுபடுத்த விரும்புவதாகவும் அவர் இயக்கும் அடுத்தடுத்த திரைப்படங்களில் LCU என பெயர் இடம் பெறும் எனவும் கூறியுள்ளார்.

லோகேஷ் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து அவரின் 67-வது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வரவில்லை.

இதனிடையே இப்படத்திற்காக இயக்குநர் லோகேஷ் ரூ. 10 கோடியை சம்பளமாக வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement