• Apr 24 2024

கேரளாவில் வசூல் மழையில் ஆட்டம் போடும் விக்ரம் திரைப்படம்- சந்தோஷத்தில் படக்குழுவினர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விக்ரம். பல பிரபலங்கள் நடித்துள்ள இந்த படம் இன்று வரை மாஸ் ஹிட் கொடுத்து வருகின்றது.

எங்கு திரும்பினாலும் விக்ரம் பற்றிய பேச்சுத்தான் தமிழ் சினிமா திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விக்ரம் படத்தின் வெற்றியால் ரொம்ப சந்தோஷம் கிடைத்துள்ளது.

இந்த படம் தமிழகத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதும் மாபெரும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.இந்நிலையில் படம் வெளியாகி 11 நாட்களில் உலகம் முழுவதும் 310 கோடி வரை வசூலித்துள்ளது, என்று அதிகாரபூர்வகமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தை தவிர கேரளாவில் விக்ரம் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையிலும் விக்ரம் திரைப்படம் வெளியாகி மீண்டும் 11 நாட்கள் ஆன நிலையில் ரூ.1.2 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் விக்ரம் திரைப்படம் கேரளாவில் மட்டும் மொத்தமாக ரூ. 32 கோடி வசூல் செய்தாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement