• Oct 03 2024

400 கோடி தாண்டியும் தியேட்டர்காரங்களுக்கு நஷ்டத்தை கொடுத்த கோட்..?

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கோட் திரைப்படம். இந்த படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளியானது.

கோட் திரைப்படத்தில் AI தொழில்நுட்பத்தின் மூலம் சில விஷயங்களை சாத்தியப்படுத்தி உள்ளார் வெங்கட் பிரபு.. மேலும் இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், லைலா, சினேகா, ஜோகி பாபு, மீனாட்சி சவுத்ரி, மோகன் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து இருந்தார்கள்.

அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கேமியா ரோலில் நடித்திருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் இவர் நடித்த காட்சிகள் பேசுப்பொருளானது. அதேபோல மட்ட என்ற பாடலுக்கு த்ரிஷா நடனமாடி இருந்தார்.

 எனினும் கோட் திரைப்படம் ஜெமினி மேன் என்ற படத்தின் காபி என்றார்கள். அதற்கேற்ப ஏஜிங் தொழில்நுட்பத்தில் விஜயை இளமையாக காட்ட ஹாலிவுட்டுக்கு போனார் வெங்கட்பிரபு. அதேசமயம், யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. படத்தில் பாடல்களை பார்த்தபின் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பாடல்கள் பிடித்துப்போகும் என சொன்னார் வெங்கட்பிரபு.


இதை தொடர்ந்து கோட் திரைப்படம் வெளியாகி 25 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இப்படம் 400 கோடி தாண்டி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால் தமிழகத்தில் முதல் வாரம் மட்டும் இந்த படத்திற்கு நல்ல வசூல் இருந்தது. இரண்டாவது வாரத்திற்கு பிறகு தியேட்டர் அதிபர்களுக்கு பெரிய லாபம் இல்லை என தியேட்டர் அதிபர்கள் சொல்லியுள்ளார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தில் மினிமம் கேரண்டி அடிப்படையில் கோட் படத்தை வெளியிட்ட 5 சதவீத  தியேட்டர்காரர்களுக்கு இப்படம் நஷ்டத்தை கொடுத்துள்ளது. விரைவில் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட்ட ராகுலை சந்தித்து இதை பற்றி சொல்லி நஷ்டம் ஏற்படாத வகையில் ஏதேனும் செய்வோம் என தியேட்டர் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணத்தினால் இந்த தகவலை வைத்து அஜித், ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement