• Mar 26 2026

சின்மயியின் தடை முறிந்தது; சினிமாவுக்குள் நுழைந்த பாடகி.! இசையமைப்பாளர் யார் தெரியுமா?

shali / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசைக்குள் நுழைந்து, தனது மென்மையான குரலால் ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த பாடகி சின்மயி, கடந்த சில ஆண்டுகளாக திரை இசையில் இருந்து விலகிய சூழ்நிலையில், மீண்டும் பாடும் செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிரொலியாக மாறியுள்ளது.


அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான “முத்தமழை” பாடலுக்கான இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் சின்மயி பாடியதைத் தொடர்ந்து, “அவளுக்குத் திரையில் இசை வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன” என்ற சர்ச்சை மீண்டும் வலுப்பெற்றது. 

சினிமா உலகில் "MeToo" விவகாரம் எழுந்தபோது, அதற்கான முக்கியக் குரல்களில் ஒருவராக இருந்தார் சின்மயி. குறிப்பாக பிரபல பாடலாசிரியர் வைரமுத்துவை நேரடியாக குற்றம்சாட்டியதற்குப் பின், அவருக்கு தமிழ் திரைப்படங்களில் பாட வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.

அதன்பிறகு, பல படங்களின் பாடல் பட்டியலிலிருந்து அவரது குரல் நீக்கப்பட்டதாகவும், இசை வெளியீட்டு விழாக்களில் அவரை அழைக்காமல் விலக்கப்பட்டதாகவும் பேச்சுகள் எழுந்தன. இதற்கிடையே, பல ரசிகர்கள் “சினிமா உலகம் சின்மயியை புறக்கணிக்கிறதா?” என்ற கேள்வியை அடிக்கடி எழுப்பினர்.


இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் டி.இமான், தனது புதிய இசையில் சின்மயி பாடியுள்ளதை உறுதி செய்து, நெகிழ்ச்சியான ஒரு பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இமான் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில், “பல வருடங்களுக்கு பிறகு என் இசையில் சின்மயி அவர்கள் மீண்டும் பாடியுள்ளார். மனதின் ஆழத்திலிருந்து மகிழ்ச்சி! " எனத் தெரிவித்துள்ளார்.

இமான் – சின்மயி கூட்டணி தமிழ் சினிமா ரசிகர்களுக்குள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த கூட்டணியின் புதிய பாடல் எப்போது வெளியாகும்? அதன் வரிகள் மற்றும் இசை வடிவம் எப்படி இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.

Advertisement

Advertisement