• Sep 25 2023

ஹாஸ்பிட்டலில் உயிருக்குப்போராடும் செல்லத்தாயி- போலீஸைக் கூட்டிட்டு வந்த துளசி- அதிர்ச்சியில் கோமதி

stella / 1 month ago

Advertisement

Listen News!


சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் வானத்தைப் போல. இந்த சீரியலில் தற்பொழுது ராஜபாண்டிக்கு துளசி கர்ப்பமாக இல்லை என்ற விஷயம் தெரிந்து விட்டது. இதனால் ராஜபாண்டி துளசியை வீட்டை விட்டு துரத்தி விட்டார்.

பின்னர் பஞ்சாயத்தில் ராஜபாண்டியைக் கத்தியால் குத்தியது பொன்னியின் அப்பா தான் என்ற விஷயமும் தெரிந்து விட்டதால் ராஜபண்டி துளசியை தவறாகப் பேசியதோடு தாலியையும் கழட்டி தரச் சொல்லி அடம்பிடித்ததால் துளசி ராஜபாண்டியை செருப்பால் அடித்து அவமானப்படுத்தினார்.


இதனால் கடுப்பான ராஜபாண்டியும் அவரது அப்பாவும் சேர்ந்து அவரது அம்மாவைக் கொடுமைப்படுத்தியதால் அவர் மயங்கி விழுந்து தற்பொழுது ஹஸ்பிட்டலில் இருக்கின்றார். இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் துளசியும் பொன்னியும் போலீஸை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக் கொண்டு வந்து இவங்க என்னுடைய அத்தையை கொடுமைப்படுத்தினாங்க என்று சொல்கின்றார். அப்போது போலீஸ் செல்லத்தாயி கண் முழிக்கட்டும் கண் முழிச்சு தருகின்ற வாக்கு மூலத்தில் உண்மை எல்லாம் தெரிஞ்சிடும் என்று சொல்கின்றார்.

இதைக் கேட்டு கோமதியும் ராஜபாண்டியும் அவரது அப்பாவும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்பதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement