• Jun 04 2023

குக்வித்கோமாளி செட்டில் ரக்ஷன் கோமாளிகளுடன் சேர்ந்து செய்த சேட்டையைப் பாருங்க- வைரலாகும் வீடியோ

stella / 1 month ago

Advertisement

Listen News!


விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றும் ரக்ஷ்னுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. சின்னத்திரையில் இருந்து முதன் முறையாக வெள்ளித்திரையில் கால் பதித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் ரசிகைகள் பட்டாளம் கொஞ்சம் கூடிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். 

விஜய் டிவியில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'கலக்கப்போவது யாரு'. இந்த நிகழ்ச்சியின் கடந்த 5, 6, 7 சீசன்களை ஜாக்லினுடன் சேர்ந்து தொகுத்து வந்தவர் ரக்‌ஷன். அந்த சீசன்கள் அனைத்துமே ரசிகர்களிடையே தாறுமாறு ஹிட்டானது. 


அதன் பின்னர் குக்வித் கோமாளி நிகழ்ச்சியினை 4 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகின்றார்.இந்த நிகழ்ச்சியில் இவர் புகழ், சிவாங்கி, பாலா ,குரேஷி ஆகியோருடனும் ஏனைய போட்டியாளர்களுடனும் செய்யும் சேட்டைகள் ஏராளம் எனலாம்.

இப்படியான நிலையில் குக்வித் கோமாளி செட்டில் செப் வெங்கட் மற்றும் தாமு மற்றும் கோமாளிகளுடன் இணைந்து செய்த சேட்டையை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களியே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement