• Apr 30 2024

AK61 கெட்டப்பில் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வெளியிட்ட நடிகர் சிம்பு -எப்படி இருக்கிறார் என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் முக்கிய நடிகர் தான் சிம்பு. இவர் நடிப்பில் இறுதியாக மாநாடு என்னும் திரைபபடம் வெளியாகியிருந்தது.

இது அவருக்கு கோலிவுட் திரையுலகில் பெரும் வெற்றியை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வேந்து தணிந்தது காடு’ என்னும் படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார்.

இருப்பினும் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் உள்ள சிம்பு அஜித் AK61 கெட்டப்பில் இருப்பது போல் தோற்றமளிக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கின்றார். மேலும், அஜித்தின் ஸ்டைல் இருக்கும் அவரது ஸ்வாக் மற்றும் ஸ்டைலைக் கண்டு சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது, அவர் வெளியிட்ட புகைப்படத்தில் கருப்பு நிற ஜாக்கெட், கருப்பு நிற டி-சர்ட் மற்றும் டான் பேண்ட் அணிந்திருந்தார். சிம்பு தனது புதிய அவதாரத்தில் கூலாக தோன்றியதால், அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement