• May 04 2024

சந்திரமுகி 2 மொத்த கலெக்ஷன் இரண்டே நாளில் இத்தனை கோடியா?

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!






இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியாகி  வெற்றியை பெற்ற திரைப்படம் தான்  சந்திரமுகி. இது ரசிகர்களிடையே  பெரும் வரவேற்பை  பெற்றதை தொடர்ந்து, தற்போது  இதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.



சந்திரமுகி 2' படத்தில்  ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். நேற்று முன்தினம் வெளியாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 'வெளியாகிய இப்படம் எல்லா மொழிகளிலும்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல்  முதல் நாளில் சந்திரமுகி 2 படம்  7.50 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.



இதனையடுத்து நேற்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் படத்தின் வசூல் அதிகரித்துள்ளது.  இரண்டாவது நாளில் இந்திய அளவில் இப்படம் 12.75 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் இரண்டே நாளில் ரூ. 20 கோடி வரை கலெக்ஷனை அள்ளியுள்ளது .

Advertisement

Advertisement

Advertisement