• May 07 2024

வெளியானது ‘Celebration of வாரிசு’ பாடல் வீடியோ! குத்தாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

வாரிசு திரைப்படத்தின் செலிப்ரேஷன் ஆஃப் வாரிசு பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது . இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷியாம், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே   நடித்திருந்தனர். விஜய்யுடன் நான் இணைய வேண்டும் என கனவு கண்டு இருந்த இசையமைப்பாளர் தமனுக்கு இந்த படத்தின் மூலம் கனவு நனவாகியது என்றே சொல்லலாம்.

திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு இந்த படம் பிடித்திருந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் வாசு திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக 300 கோடியை எட்டி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாரிசு திரைப்படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து "ஜிமிக்கி பொண்ணு" என்ற பாடலின் வீடியோ வெளியிடப்பட்டது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

தற்போது வாரிசு திரைப்படத்திலிருந்து ;;‘CELEBRATION OF'' பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. தற்போது ரசிகர்கள் இந்த பாடலை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த வருகிறார். அந்தப் படத்திற்கு லியோ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்த டைட்டில் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது,அத்துடன் ரசிகர்கள் பெரும் ஹப்பியில் குத்தாட்டம் போட்டு வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement