• May 03 2024

சாதி தான் என் முதல் எதிரி அதை முதலில் நிறுத்துங்க- ஓபனாகப் பேசிய கமல்ஹாசன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

அட்டக்கத்தி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பா ரஞ்சித். இதனையடுத்து கார்த்தியின் மெட்ராஸ், ரஜினி நடிப்பில் கபாலி, காலா, ஆர்யா, பசுபதி நடித்த சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கி கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. 

இதனிடையே நீலம் பப்ளிகேஷன், நீலம் இதழ் என இலக்கியத் துறையிலும் தடம் பதித்தார். இதன் தொடர்ச்சியாக சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையம் என்ற பெயரில் புத்தக விற்பனை நிலையம் நிறுவியுள்ளார்.இந்த நீலம் பண்பாட்டு மையத்தை நடிகர் கமல்ஹாசன் இன்று திறந்து வைத்தார். முன்னதாக நேற்று கமல்ஹாசனை நேரில் சந்தித்த நீலம் பண்பாட்டு மையத்துக்காக அழைப்பு விடுத்திருந்தார். இதனையேற்று கமலும் நீலம் பண்பாட்டு மையத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.


 அப்போது பேசிய கமல், "அரசியலையும் கலாச்சாரத்தையும் தனியாக வைத்திருக்க வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம். நாம் உருவாக்கியது தான் அரசியல். மக்களுக்கானது தான் அரசியல். அதனை தலைகீழாக திருப்பிப்போட்டு பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆளும் கட்சி, ஆள்பவர்கள் என்ற வார்த்தையே வரக்கூடாது என நினைக்கிறேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய கமல், "தலைவர்களை வெளியே தேடிக்கொண்டிருக்கும் தலைவர்களில் பலர் கீழே குடிமகன்களாக அமர்ந்துள்ளனர். சாதி தான் என் முதல் எதிரி. அதனை நான் 21வது வயதிலேயே சொல்லிவிட்டேன். அரசியல் ரீதியான பிறகு சில சமசரங்கள் செய்ய வேண்டியுள்ளது. சக்கரத்திற்கு பிறகு மனிதனின் மாபெரும் சிருஷ்டி கடவுள். அதனை மறந்துவிடக் கூடாது. நம்முடைய உருவாக்கம் நம்மையே தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதில் கொடூரமான ஆயுதம் சாதி. அதை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என எனக்கு மூன்று தலைமுறைக்கு முந்தைய அம்பேத்கரிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்னும் அது நடக்கவில்லை" என தெரிவித்தார்.


மேலும், "அதன் நீட்சியாகத் தான் நீலம் பண்பாட்டு மையத்தை பார்க்கிறேன். ஸ்பெல்லிங் வேறாக இருக்கலாம் ஆனால், மையமும் நீலமும் ஒன்றுதான். என்னையும் உங்களில் ஒருவரக சேர்த்துக்கொண்டதில் மகிழ்ச்சி" என்று கமல் பேசி முடித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய பா ரஞ்சித், நீலம் பண்பாட்டு புத்த விற்பனை நிலையத்தை திறந்து வைத்த கமல்ஹாசனுக்கு நன்றி கூறினார். மேலும், கமல் சாருக்கு நான் மிகப் பெரிய ரசிகன் என ஓப்பனாக பேசினார்.


மேலும், கமல் சாரின் எழுத்துக்கு மிகப் பெரிய விசிறி நான். குறிப்பாக விருமாண்டி, மகாநதி திரைப்படங்களை சொல்லலாம். சிலர் ஆர்ட் ஃபிலிம் எடுப்பாங்க, இன்னும் சிலர் கமர்சியல் சினிமா எடுப்பாங்க. ஆனால், இது இரண்டையும் சேர்த்து படம் எடுத்து வெற்றிப்பெற்ற மிகச் சிலரில் கமல்ஹாசன் தான் முக்கியமானவர் என பேசினார். கடந்தாண்டு நடைபெற்ற விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் விருமாண்டி திரைப்படம் குறித்து பா ரஞ்சித் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், கமலின் 235வது படத்தை ரஞ்சித் இயக்குவார் என சொல்லப்படுகிறது. விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் சாருக்காக கதை ரெடியாக இருக்கிறது. அது மதுரை பின்னணியில் இருக்கும் என கூறியிருந்தார் ரஞ்சித். அதற்கு கமலும் ஓக்கே சேர்ந்து படம் பண்ணலாம் என பதிலளித்தார். இதனால் விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் சொன்னபடி கமல் - பா ரஞ்சித் கூட்டணி விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement