• May 04 2024

திரையில் காட்டாத 18+ சமாச்சாரங்களை ஓடிடியில் பார்க்கலாமா?.. வெற்றிமாறன் எடுத்த அதிரடி முடிவு..ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த மாதம் விடுதலை படம் திரையரங்குகளில் வெளியாகி பெரிய வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் வெற்றிமாறனின் கதையும், சூரியின் நடிப்பும் அனைவரின் கவனத்தையும் திருப்பியது. அதாவது இந்த மாதிரி ஒரு சீரியஸான கேரக்டரை காமெடி நடிகரான சூரியிடமிருந்து எதிர்பார்க்காத மக்கள் ரொம்பவே வியப்பாக பார்த்து பாராட்டி வருகிறார்கள்.

 

அத்துடன் விஜய் சேதுபதி கேரக்டரும் இந்த கதைக்கேற்ற மாதிரி மிகவும் கச்சிதமாக பொருந்தக் கூடியதாக இருக்கிறது. இப்படி என்னதான் இப்படத்திற்கு விமர்சன ரீதியாக பாராட்டுக்கள் கிடைத்தாலும் இப்படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியாத மாதிரி சில காட்சிகள் இருப்பதால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் படத்தை பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

அத்துடன் இப்படத்தை ஓடிடி-யில் வெளியிடும் உரிமையை ஜீ தமிழ் பெற்றுள்ளது. இதனை அடுத்து இப்படத்தை வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் விடுதலை படத்தை வெற்றிமாறன் முதலில் ரொம்பவே பெரிதாக எடுத்திருக்கிறார். அதனால் திரையரங்களில் அதிக நேரம் ஆகும் என்பதால் சில காட்சிகளை நீக்கிய பிறகுதான் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

இதனை அடுத்து தற்போது விடுதலைப் படம் ஓடிடியில் வெளியிட இருப்பதால் இயக்குநர் வெற்றிமாறன் நீக்கப்பட்ட காட்சிகளை ஓடிடி இல் சேர்த்து விடலாம் என்று முடிவு செய்திருக்கிறார். இப்படத்தில் திரையரங்கு நேரத்தில் இருந்து கூடுதலாக 20 நிமிடம் காட்சிகள் இருக்கும்படி சேர்த்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் விடுதலை படத்தை தியேட்டரில் பார்க்காத காட்சிகளை ஓடிடியில் பார்க்கலாம் என்று இந்த மாதிரியான ஏற்பாடு செய்திருக்கிறார்.அதனால் ரசிகர்களும் அந்த காட்சிகளை பார்த்ததற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement