• Oct 16 2024

'படுக்கைக்கு அழைத்து ..என்னை நிறைய பேர் ஏமாத்திட்டாங்க '– உண்மையை உளறிய ஓவியா

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஓவியா. அதன் பிறகு இவர் தேர்ந்தெடுத்து நடித்த கிராமத்து மண்வாசனை வீசும் படங்கள் அனைத்துமே வெற்றி பெற்றது.


பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு நேர்மையாக விளையாடினார் இதனால் அவருக்கு ரசிகர்கள் உருவாகி ஒரு ஆர்மியையும் உருவாக்கினர். தொடர்ந்து  விளையாடினாலும் அதில் அதிக நாட்கள் தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறினார். வெளியே வந்த ஓவியாவுக்கு  சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தன.


அதில் முதலாவதாக 90ml திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்த படம் சரியாக அமைந்ததால் ஓவியாவுக்கு மார்க்கெட் வீழ்ச்சி அடைந்தது அதிலிருந்து மீண்டு வர முடியாமல் இன்று அளவும் தட்டு தடுமாறி கொண்டு இருக்கிறார். கடைசியாக நடித்த காஞ்சனா 3 நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது பல்வேறு விதமான கேள்விகளுக்கு நறுக்குனருக்கென பதில் அளித்தார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. உங்களை யாராவது மிஸ் யூஸ் பண்ணி இருக்காங்களா.? என்ற கேள்விக்கு ஆம் நிறைய பேர் பண்ணி இருக்காங்க நான் ரொம்ப உண்மையாக இருப்பேன்.


அதை சிலர் அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு ஏமாத்திட்டு போயிடுவாங்க அப்படி என் வாழ்க்கையில் நிறைய பேர் என்னை ஏமாத்திட்டாங்க. பின்னர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தது குறித்து கேட்டதற்கு.. அது ரொம்ப தப்பான விஷயம் இது ஜஸ்டி சினிமா உங்களுடைய தொழில் அவ்வளவு தான்.

அதுக்காக அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் நடிக்கணும்னு அவசியம் இல்ல அப்படியான விஷயங்களை வெளியில் தைரியமாக சொல்ல வேண்டும் அப்படி நடிப்பதற்கு சும்மாவாகவே இருக்கலாம் இந்த காலகட்டத்தில் கூட இது போன்ற விஷயங்கள் நடக்கிறது என்பதை கேட்கவே வெட்கமாக இருக்கிறது என கூறினார்




Advertisement