• Sep 17 2024

பிரபல நடிகரின் படத்தை நடிக்க மறுத்த போனி கபூரின் மகள் ஜான்வி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பின் ராட்சசன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாறன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இது தவிர தற்பொழுது நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

இதனை அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கி நடிக்கவிருக்கிறார்.இப்படத்தை தயாரிப்பாளரும், பைனான்ஷியருமான அன்புச்செழியன் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் இளம் நடிகை ஜான்வி கபூர் அணுகியுள்ளனர். ஜான்வி கபூர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தனுஷ் படமா வேண்டவே வேண்டாம் என்று கூறியுள்ளாராம் ஜான்வி கபூர்.மேலும் இப்படம் மட்டுமின்றி இதற்குமுன் ஹிந்தியில் தனுஷின் நடிப்பில் வெளிவந்த அத்ராங்கி ரே படத்திலும், முதன் முதலில் சாரா அலி கானுக்கு பதில் கதாநாயகியாக நடிக்கவிருந்தது ஜான்வி கபூர் தானாம்.

எனினும் தனுஷ் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று ஜான்வி கபூர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இவர் ஏன் தனுஷ் படம் என்றால் எப்படி பயப்படுகிறார் என்று திரை வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

Advertisement