• May 06 2024

ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்டு.. பிரபல நடிகையை இழிவு படுத்திய வெப் சீரிஸ்.. கொந்தளிக்கும் பாலிவுட் பிரபலங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் ஒரு புகழ்பெற்ற இணைய தொடர் 'தி பிக் பேங் தியரி'. இந்த தொடருக்கு உலகெங்கிலும் ஏராளமான பார்வையாளர்கள் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில் இந்த இணைய தொடரில் ஒரு குறிப்பிட்ட எபிசோடில் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகை மாதுரி தீட்சித் இருவரையும் ஒப்பிடும் வகையில் அமைந்த ஒரு காட்சி இடம்பெற்று இருந்தது. 


அதாவது அந்த காட்சியில் ஷெல்டன் கூப்பர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜிம் பார்சன்ஸ் ஐஸ்வர்யாவை 'ஒரு ஏழையின் மாதுரி தீட்சித்' என குறிப்பிட்டு இருந்தார். அதற்கு ராஜேஷ் கூத்ரப்பள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்த குணால் நய்யார் "ஐஸ்வர்யா ராய் ஒரு தெய்வம் அவருடன் ஒப்பிடுகையில், மாதுரி தீட்சித். ஒரு தொழுநோயாளி விபச்சாரி" என குறிப்பிடுவது போன்ற காட்சி தான் அந்தத் தொடரில் அமைக்கப்பட்டு இருந்தது. 


இந்த காட்சிக்கு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பாலிவுட் பிரபலங்கள் பலரும் கொதித்தெழுந்துள்ளனர். அந்தவகையில் நடிகை மாதுரி தீட்சித்தை இழிவுபடுத்தும் விதமாக இடம்பெற்று இருந்த காட்சிக்கு எதிராக நெட்ஃப்ளிக்ஸ் மீது வழக்கு தொடுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அவரின் தீவிர ரசிகர் ஒருவர். 

அதுமட்டுமல்லாது அந்த நோட்டீஸில் பெண்களுக்கு எதிரான வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் அல்லது தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த நபர் குறிப்பிட்டு இருந்தார். 


இது குறித்து நடிகை ஐஸ்வர்யாராயின் மாமியாரும் மற்றும்  அரசியல்வாதியுமான ஜெயா பச்சன் கூறுகையில் "குணால் நய்யார் ஒரு பைத்தியமா? அவரை மனநல காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும். அவரது கருத்து குறித்து அவரது குடும்பத்தினர் என்ன நினைக்கிறார்கள் என கேட்க வேண்டும்" என மிகவும் காண்டமாக பதில் அளித்து இருந்தார். 

இவரைத் தொடர்ந்து ஊர்மிளா மடோன்கர் மற்றும் தியா மிர்ஸே ஆகியோரும் அவர்களின் கருத்தை முன்வைத்துள்ளனர். அதாவது "அந்த எபிசோட் குறித்து எனக்கு தெரியாது அப்படி அது உண்மையாக இருப்பின் அது ஒரு மூர்க்கத்தனமான ஒரு செயல். அவர்களின் சீப்பான மனப்பான்மையை குறிக்கிறது. இது அவமரியாதையான வெறுக்கத்தக்க செயல்" என கூறியுள்ளனர்.


இந்நிலையில் தற்போது மிதுன் விஜயகுமார் தனது அறிக்கையில் " இது போன்ற செயல்களுக்கு நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டியது அவசியம். சமூகங்களின் கலாச்சார மதிப்புகள் மற்றும் உணர்வுகளுக்கு அவர்கள் மதிப்பளிக்க வேண்டும். ஸ்ட்ரீமிங் சேவை வழங்குபவர்கள் அவர்களின் கன்டென்ட் மீது ரொம்ப கவனமாக இருப்பது அவசியம். 

இதனை சரியாக கையாளும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அவர்கள் முன்வைக்கும் கன்டென்ட் இழிவான, புண்படுத்தும் அல்லது அவதூறான உள்ளடக்கம் கொண்டவை அல்ல என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அவர்களுடையது. பிரபலமான நடிகை மாதுரி தீட்சித் மீது இப்படி ஒரு இழிவான வார்த்தை பயன்படுத்தப்பட்டது அவரின் கண்ணியத்தையும் மரியாதையும் புண்படுத்தும் காரியமாகும்" என மிகவும் உருக்கமாகவும், கோபத்துடனும் தெரிவித்து இருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement