• May 19 2024

கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தில் காதலர் தினம் கொண்டாடிய பாலிவுட் நடிகை...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் 2012ல் வெளியான ஜானத் 2 எனும் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை இஷா குப்தா. இவர் தமிழிலும் கடந்த 2017ல் வெளியான யார் இவன் படத்திலும் இஷா குப்தா நடித்துள்ளார். தெலுங்கில் வெளியான வீடெவ்வடு படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் பாலிவுட்டின் ஹாட் நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் பிரபலமாக வலம் வருகிறார். 


தனது உடம்பை வில்லாக வளைத்து யோகாக்கள் செய்வதிலும் இவர் பலே கில்லாடி என்பது குறிப்பிடத்தக்கது. ஓடிடியில் வெளியாகும் ஹாட் வெப்சீரிஸ்களிலும் சமீப காலமாக அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.


ரிஜெக்ட் எக்ஸ் வெப்சீரிஸில் 2020ம் ஆண்டு நடித்த இஷா குப்தா, மல்லிகா ஷெராவத் உடன் இணைந்து 2021ல் நகாப் எனும் வெப்சீரிஸில் செம ஹாட்டாக நடித்தார். கடந்த ஆண்டு வெளியான ஆஷ்ரம் சீசன் 3லும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து ஓடிடி ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.


37 வயதாகும் நடிகை இஷா குப்தா ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மானுவேல் காம்பஸ் கல்லார் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். அடிக்கடி காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார்.


சொகுசு ரெசார்ட் ஒன்றில் காதலனுடன் காதலர் தினம் கொண்டாடிய இவர் நீச்சல் குளத்தில் குளித்து கும்மாளம் போட்டுள்ளார். இந்நிலையில், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருந்து சொட்டச் சொட்ட இஷா குப்தா நடந்து வருவதை அவரது காதலன் வீடியோ எடுத்துள்ளார்.அந்த வீடியோவை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.


Advertisement

Advertisement