• Sep 26 2023

பாலிவூட் நடிகர்கள் Fake ஐடிகளை பயன்படுத்தி என்னை ஏமாத்திறாங்க- சர்சையைக் கிளம்பிய கங்கனா ரனாவத்

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான  தாம் தூம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் கங்கனா ரனாவத்.பாலிவூட் நடிகையான இவர் ஏகப்பட்ட தற்பொழுது தமிழில் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.இது தவிர எமர்ஜென்சி" என்ற திரைப்படத்தில், மறைந்த அரசியல் தலைவர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தை இவர் ஏற்று நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் இவர் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் திரையுலகில் களமிறங்கி இருக்கிறார்.


இந்த நிலையில் பாலிவுட் பிரபலங்கள் சிலர், Fake ஐடிகளை பயன்படுத்தி தன்னுடன் சாட்டிங் செய்து வருவதாகவும், தன்னை டேட்டிங் செய்ய விரும்புவதாகவும் புகார் ஒன்றை முன்வைத்துள்ளார்.  இது குறித்து பேசி அவர் "திரைப்பட மாபியாக்கள் எப்பொழுதும் தங்கள் இயல்பான வேலையில் ஈடுபட்டவாறு இருக்கின்றனர்.

மேலும் நான் ஏற்கனவே டேட்டிங் செய்த ஒரு பிரபல பாலிவுட் நடிகர், பொதுவாக அவர் போலியான சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்தி என்னிடம் சேட் செய்வது அவருடைய வழக்கம்".


ஒரு முறை அவர் என்னுடைய சமூக வலைத்தளத்தை ஹேக் செய்து முடக்கி என்னை மிரட்டியிருந்தார். அதேபோல பெண் ரசிகர்களை அதிகமாகக் கொண்ட மற்றொரு பாலிவுட் நடிகர், என் வீட்டிற்கு வந்து தன்னை டேட்டிங் செய்யுமாறு கெஞ்சினார்". 

"என்னை பல இடங்களுக்கு அவர் ரகசியமாக பின் தொடர்ந்து வந்தார், ஆனால் அதை நான் புறக்கணித்துவிட்டேன்" என்றும் கூறியுள்ளார். அதர்மத்தை அளிப்பதே தர்மத்தின் முக்கியமான நோக்கம் என்பதால் அவர்களை அழிப்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்று கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதை மேற்கோளிற்கு காட்டியுள்ளார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement