• Apr 27 2024

பில்லா பட இயக்குநர் விஷ்ணுவர்தன் அடுத்த படம் யாருடன் தெரியுமா? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் விஷ்ணுவர்தன் பில்லா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர். அந்த படம் பெரியளவில் ஹிட் கொடுத்திருந்தது. இவர் கடைசியாக ஷெர்ஷா எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிக்பெரிய வெற்றியை பெற்று பல விருதுகளை குவித்தது என்றே சொல்லாம்.

இந்த படத்தை தொடர்ந்து விஷ்ணுவர்தன்  தமிழில் ஏதேனும் படங்களை இயக்குவாரா என ஆவலுடன் காத்துள்ளனர். ஆனால், தற்போது அவர் பாலிவுட்டில் படம் ஒன்றை இயக்கவுள்ளார். 

அதன்படி , பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கானை வைத்து ஒரு திரைப்படம் இயக்க திட்டமிட்டுள்ளாராம் என தகவல் கசிந்துள்ளது.

தற்போது அதற்கான கதை மெருகேற்றும் பணியில் அவர் மும்மரமாக இருக்கிறாம். மேலும், சல்மான் கான் விஷ்ணுவர்தன்  இணையும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

ஏற்கனவே AK62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதாகவும், எனவே அந்த படத்தை விஷ்ணுவர்த இயக்குவதாகவும்  தகவல்கள் பரவி வந்தது. எனவே அஜித் ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், தற்போது அவர் அஜித்தை வைத்து படம் இயக்காமல் சல்மான் கானை வைத்து படம் இயக்குவதாக பரவிய தகவல் குறித்து அஜித் ரசிகர்களை அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம்.



Advertisement

Advertisement

Advertisement