• Mar 26 2023

இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. பிரபல தயாரிப்பாளர் கைது.. பெரும் பரபரப்பில் திரையுலகம்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் மார்ட்டின் செபாஸ்டியன். இவர் பல படங்களை தயாரித்து பிரபல பட அதிபராக முன்னேறி இருப்பவர். இந்நிலையில் இவர் மீது சமீபத்தில்  திருச்சூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். 


அதில் அவர் குறிப்பிடுகையில் "மார்ட்டின் செபாஸ்டியன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி எனக்கு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் மோசமாக பாலியல் தொல்லை கொடுத்தார். அதுமட்டுமல்லாது திருமணம் செய்து கொள்வதாக எனக்கு உறுதி அளித்து மும்பை, பெங்களூரு எனப் பல நகரங்களுக்கு அழைத்துச் சென்று என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்" என்று கூறியிருந்தார். 


இவரின் இந்தப் புகார் மீது போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த தயாரிப்பாளர் மார்ட்டின் செபாஸ்டியன் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் ஒன்றினை செய்தார்.


இருப்பினும் எர்ணாகுளம் போலீசார் முன்பு அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் கோர்ட்டு மார்ட்டின் செபாஸ்டியனுக்கு முன்ஜாமீன் வழங்கி இருந்தது.

இதனைத் தொடர்ந்து மார்ட்டின் செபாஸ்டியன் போலீசில் ஆஜரானார். அவரிடம் பல கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் மார்ட்டின் செபாஸ்டியனை போலீசார் கைது செய்தனர். தயாரிப்பாளர் ஒருவரின் இவ்வாறான மோசமான செயலானது மலையாள பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement