• May 18 2024

என்னது பெண்ணும் பெண்ணும் காதலா..? அந்த மாதிரிப் பெண்ணாக மாறி ஷாக் கொடுத்த பிக்பாஸ் சுருதி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று 'பிக்பாஸ்'. இந்த நிகழ்ச்சியானது தற்போது 6சீசன்களை வெற்றிகரமாக கடந்திருக்கின்றது. இதில் மறக்க முடியாத சீசன்களில் ஒன்றாக விளங்குவது சீசன் 5.


இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராகப் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவர் தான் சுருதி. இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனது வாழ்க்கையில் நடந்த பல கசப்பான நிகழ்வுகளை பகிர்ந்தார். இருப்பினும் நிகழ்ச்சியின் இறுதிவரை செல்லாது இடையிலேயே குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறி விட்டார்.


இந்நிலையில் இவர் தற்போது "வாழ்வு தொடங்குமிடம் நீதானே" என்ற வெப் தொடரில் நடித்து வருகின்றார். இந்த வெப் தொடரை புதுமுக இயக்குநர் ஜெயராஜ் பழனி என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியாகி இருக்கின்றது.

இந்த வெப் தொடரானது பெண்ணும் பெண்ணும் காதலிப்பதைப் பற்றியும் அதனை சமுதாயம் எப்படி பார்க்கிறது என்ற கருத்தையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் பிக் பாஸ் பிரபலம் சுருதி லெஸ்பியானாக நடித்துள்ளார். 


இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் போஸ்டரை பிக்பாஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement