• May 09 2024

காதலனுடன் தாறுமாறாக ரொமான்ஸ் செய்யும் பிக்பாஸ் ஆயிஷா- அடிக்கடி வெளியாகும் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


வெள்ளித்திரை நடிகைகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் சின்னத்திரை நடிகைகளில் ஒருவர் ஆயிஷா. ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சத்தியா' சீரியல் மூலம் பிரபலமான இவர், சமீபத்தில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.


ஆரம்பத்தில் இருந்தே தனக்கென ஒரு வட்டம் போட்டுக்கொண்டு அதன் உள்ளேயே இருந்த ஆயிஷா, அதிகமாக தன்னை பற்றியும், தன்னுடைய குடும்பத்தை பற்றியும் வெளியில் கூறியது இல்லை. டாஸ்க் ஒன்றின் போது கூட, தன்னை பற்றிய தகவல்களை கூற மறுத்துவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.


பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் சண்டை பிடிப்பவராக வலம் வந்தாலும், போகப்போக ரசிகர்களின் மனம்கவர்ந்த போட்டியாளராக மாறிய ஆயிஷா, ஒருமுறை தன்னுடைய தோழி தனலக்ஷ்மியிடம் யோகேஸ்வரன் என்பவரை காதலித்து வருவதாகவும், ஆனால் தன்னுடைய குடும்பத்தினர் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மறுப்பதாக கூறி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.


அதே போல் தன்னுடைய காதலர் யார் என்பதை, அறிவிக்கும் விதமாக முகம் தெரியாமல் முதலில் புகைப்படம் வெளியிட்ட ஆயிஷா, பின்னர் காதலர் தினத்தன்று தன்னுடைய காதலரின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டினார். அதனைத் தொடர்ந்து இவர்கள் ரொமன்ஸ் செய்யும் புகைப்படங்கள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. 


அதனைத் தொடர்ந்து தற்பொழுதும் இவர் வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement