• May 07 2024

செல்லப் பேரு ஆப்பிள் பாடலுக்கு வேற லெவலில் ஆட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவின்- சூப்பரான வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி நேற்றுடன் 50 நாளை கடந்தது. நேற்று நடந்த எவிக்ஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டார்.இதனை அடுத்து இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

மேலும் பிக்பாஸ் வீட்டின் இந்த வாரத் தலைவராக அசீம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் இவர் இந்த வாரம் என்ன மாற்றத்தினைக் கொண்டு வரப் போகின்றார் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாகவும் உள்ளனர்.

இந்த வீட்டில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ஷிவின்.இவர் எந்த விதமான குரூப்பிஷமும் இல்லாமல் தனித்து விளையாடி வருவதோடு ரசிகர்களின் விருப்பத்திற்குரிய போட்டியாளராகவும் இருந்து வருகின்றார்.


இந்த நிலையில் ஷிவின் ஆட்டோக்காரர்களைப் போல உடையணிந்து போக்கிரி படத்தில் இடம் பெறும் என் செல்லப் பேரு ஆப்பிள் என்னும் பாடலுக்கு சிறப்பாக நடனமாடியுள்ளார். இது குறித்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement