• May 07 2024

பிக்பாஸ் சீசன் 7-இல் அதிரடியாக களமிறங்கவுள்ள சர்ச்சை நாயகன்... அப்போ சண்டைக்கும், பரபரப்பிற்கும் பஞ்சம் இருக்காது போல..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 6சீசன்களை வெற்றிகரமாக கடந்திருக்கின்றது. அந்தவகையில் இறுதியாக நடந்த சீசனின் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து 7ஆவது சீசன் எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். அந்தவகையில் பிக்பாஸ் 7வது சீசன் ஆகஸ்ட் மாதமே தொடங்கும் என சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகி இருந்தது.


இந்நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ள பிரபலங்கள் குறித்த தகவல்கள் அடிக்கடி வெளியாகிய வண்ணம் உள்ளன. அந்தவகையில் விஜய் டிவி பிரபலங்களான தொகுப்பாளினி பாவனா, கலக்கப்போவது யாரு பிரபலம் நடிகர் சரத், மாகாபா, உமாரியாஸ் போன்றோர் போட்டியாளர்கள் லிஸ்டில் பேசப்படுவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்த வரிசையில் சர்ச்சை நாயகன் பயில்வானும் இணைந்திருப்பதாகத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. எனவே இந்த சீசன் ஆனது பரபரப்பாகவும், சண்டை சச்சரவிற்கு பஞ்சமில்லாமலும் இருக்கும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement