• May 04 2024

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் ஆடிஷனில் கலந்து கொண்ட முக்கிய பிரபலங்கள்- அடடே இவங்களும் வருவாங்களா?

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்த ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.இந்த சீசனிலும் விஜய் டிவி பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சரத், பாவனா, மாகாபா மற்றும் உமா ரியாஸ் ஆகியோர் ஆடிஷனில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.


 உமா ரியாஸ் ஏற்கனவே விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். இவரது மகன் ஷாரிக் ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது தெரிந்தது.


அதேபோல் பாவனா சூப்பர் சிங்கர் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் என்பதும் மாகாபா மற்றும் சரத்தும் விஜய் டிவி பிரபலங்கள் என்பது தெரிந்ததே.


மேலும் இவர்களுடன் நடிகை ரேகா நாயர் ஆடிஷனில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ‘இரவின் நிழல்’ படத்தில் நடித்த தன்னை மோசமாக விமர்சனம் செய்த பயில்வான் ரங்கநாதனை நடுரோட்டில் கேள்வி கேட்டவர் இவர்தான் என்பதும் முக்கியமாகும்.


மேலும் இன்னும் யாரெல்லாம் இதில் கலந்து கொள்ளப் போகின்றார்கள் என்ற விபரம் விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement