விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபல்யமான நிகழ்ச்சியும் அதிக ரி ஆர் பி உள்ளதும் என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி மட்டுமே. ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் கூட . இந்த நிகழ்ச்சி கடந்த 6 சீசன்களாக வெற்றி நடை போட்டுள்ளது. இதனால் அடுத்து ஆரம்பமாகவுள்ள 7வது சீசனுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.



இந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 1 தொடங்கவிருக்கிறது. எனினும், இவர்கள்தான் போட்டியாளர்கள் என்னும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் கிடைக்கப்படவில்லை. எனினும், மற்ற சீசன்களை விட இந்த சீசன் பிக் பாஸ் முற்றிலும் மாறுபட்டு இருக்கப்போகிறது எனவே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் சின்னத்திரையில் அமுல்பேபி என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த பிரபலம் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் உறுதியான போட்டியாளர் லிஸ்டில் இணைந்துள்ளதாக பதிய தகவல்கள் வெளியாகி உள்ளன

விஜய் டிவியில் வெளியான ஆபீஸ் சீரியல் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் சின்னத்திரை நடிகர் விஷ்ணு. பின்னர் ஜீ தமிழில் வெளியான சத்யா சீரியலில் அமுல் பேபி ஆக ஆயிஷாவுடன் விஷ்ணு இணைந்து நடித்த நிலையில் இருவரும் காதலித்து வந்ததாகவும்,பின்னர் பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடதக்கது.
Listen News!