• Jan 18 2025

ஆண்களை மயக்க பிகினி உடை அணிந்தேனா? இணையத்தில் கிளம்பிய சர்ச்சை! மாயாவின் சுளீர் பதிலடி

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் தான் நடிகை மாயா. 

இவர் ஒரு மேடை நாடக நடிகர். அத்துடன் மேடை நாடகங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். 

மாயா ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபல படுத்திய படம் என்றால் அது கண்டிப்பாக கமல் நடித்த விக்ரம் திரைப்படம் தான். லியோ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக் பாஸ் டைட்டில் வின்னராக மாயா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அர்ச்சனா தான் வெற்றி பெற்றார். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மாயாவுக்கு , சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.


அண்மையில், பேங்காக் சென்று பிகினி உடையில் மாயா எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில், அந்த புகைப்படங்களை பார்த்த சிலர், ஆண்களை மயக்க தான் இப்படி கவர்ச்சியான ஆடைகளை போட்டு இணையத்தில் பகிர்கிறீர்களா? என்று கமெண்ட் செய்துள்ளனர்.


அதற்கு பதிலடி கொடுத்த மாயா, இங்கே இருக்கும் எல்லா பெண்களும் மற்றவர்களை கவரவும் நல்லா தெரியவும், கிளாமராக தெரியனும் என்பதற்காக கிளாமர் ஆடைகளை போடுவது கிடையாது. அவர்களுக்கு என்ன விருப்பமாக இருக்கிறதோ அதை போடுகிறார்கள்.

பிகினி உடை மினி ஸ்கெர்ட் அணிவதால் அது ஆபாசம் என்று அர்த்தம் கிடையாது. இந்த சமூகத்தில் என்ன சொன்னாலும் உங்கள் காதில் கேட்டுக்கொள்ளாமல் உங்களுக்கு என்ன பிடித்த ஆடையை அணியுங்கள் என்று மாயா தெரிவித்து இருக்கிறார்.   

Advertisement

Advertisement