• May 03 2024

மணக்கோலத்தில் பிக்பாஸ் ஜூலி... பிரபலங்களுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாட்டம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக பல கோஷங்களை எழுப்பி 'வீரத்தமிழ்ச்சி' என புகழப்பட்ட ஒருவரே ஜூலி. இதனைத் தொடர்ந்து இவருக்கு சோசியல் மீடியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ரசிகர்கள் அவருக்கு ஆர்மி ஆரம்பித்து வரவேற்றனர். 


எது எவ்வாறாயினும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ஒரு சில நாட்களிலேயே ஜூலியின் உண்மை முகத்தை ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். அதுமட்டுமல்லாது காய்த்ரி ரகுராம், சக்தி ஆகியோருடன் இணைந்து அங்கு ஜூலி போட்ட ஆட்டம், ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது.

இதனால் சோசியல் மீடியாவில் ஆஹா ஓஹோவென பலவாறாக புகழ்ந்த ரசிகர்களே அவரை கழுவி ஊற்ற ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் ட்ரோல் மற்றும் மீம்ஸ் கன்டென்ட்டாக மாறினார். 


அத்தோடு பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக ஜூலி அறிவித்ததை கூட நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்திருந்தனர்.

மேலும் இவர் சோசியல் மீடியாவில் போட்டோ ஷூட் என்ற பெயரில் அரைகுறை ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு அவ்வப்போது நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டியும் இருக்கின்றார்.


பிக்பாஸ் ஐ தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலிக்கு பெரிதாக ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும் சோசியல் மீடியாவில் புகழ் வெளிச்சத்திற்காக ஏதாவது ஒன்றை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாது ஜூலி தற்போது ஜீ தமிழின் 'தவமாய் தவமிருந்து' சீரியலில் நடித்து இருக்கிறார்.


இந்நிலையில் நேற்றைய தினம் ஜூலி தன்னுடைய பிறந்த நாளை 'தவமாய் தவமிருந்து' சீரியல் செட்டில் தன்னுடைய சீரியல் குழுமத்துடன் இணைந்து கேக் வெட்டி மிகவும் சிறப்பாக கொண்டாடி இருக்கின்றார்.

அதில் இவர் இளவரசி போன்று உடையணிந்து மணப்பெண் போல அழகாக காட்சி அளிக்கின்றார். இவருக்கு ரசிகர்கள் மட்டுமன்றி பல திரைப்பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement