• May 08 2024

"தேவதைக்கு வெட்கம் வந்தெல்லோ.."- ரஜினி படப்பாடலை மேடையில் பாடி அசத்திய பிக்பாஸ் ஜனனி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜனனி. இவர் இலங்கையை சேர்ந்தவர். சீசன் 3இல் கலந்து கொண்ட லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.


இருப்பினும் ஜனனி குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து இடையிலேயே வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் பலவும் வர ஆரம்பித்து விட்டது. அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில்,இவர் அண்மையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு மேடையில் ரஜினி படப்பாடல் ஒன்றினைப் பாடியிருக்கிறார். இந்த பாடல் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. அதுமட்டுமல்லாது இதேபாடலினைத் தான் அவர் பிக்பாஸ் வீட்டிலும் பாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement