• May 03 2024

''திருமணம் எனும் நிக்கா'' நஸ்ரியா-வை போல மாறிய பிக் பாஸ் ஜனனி..! திடீரென வைரலாகி வரும் வீடியோ..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜனனி. இவர் இலங்கையை சேர்ந்தவர். சீசன் 3இல் கலந்து கொண்ட லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.

இருப்பினும் ஜனனி குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து இடையிலேயே வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.பிக்பாஸ் ஆரம்பம் முதலே தனது புன்சிரிப்பு  மற்றும் இலங்கை தமிழ் பேச்சாலும் பல இலட்சக்கணக்கானோரை  தன்வசப்படுத்திய ஜனனி, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டமை அவரது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

 பின்னர் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் பலவும் வர ஆரம்பித்து விட்டதாக தகவல்களும் வெளிவந்தன.

சமூகவலைத்தளங்களில் எப்போவும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள்,வீடியோ என்பவற்றை பகிர்ந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

இந்நிலையில் வெள்ளை நிற உடையில் திருமணம் என்னும் நிக்கா பட  பாடலுக்கு வீடியோ செய்து பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement