• Mar 20 2025

பிக்பாஸ் ஒரு விளையாட்டு மட்டுமே.. ரவீந்தர் வெளியிட்ட திடீர் போஸ்ட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகையான மகாலட்சுமிக்கும் தயாரிப்பாளரான ரவீந்திரருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நடிகை மகாலட்சுமி ஆரம்பத்தில் சின்ன திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் பின்பு சீரியல்களில் கதாநாயகியாகவும் வில்லியாகவும் நடித்து வருகின்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் ரவீந்தர்  தனது கல்யாண புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதனை ரசிகர்கள் நம்பவில்லை. அத்துடன் உடலளவில் ரவீந்தர் மகாலட்சுமிக்கு பொருத்தமில்லை காசுக்காக தான் மகாலட்சுமியும் ரவீந்தரை திருமணம் செய்தார் என பல கருத்துக்களை வெளியிட்டனர்.

ஆனாலும் மகாலட்சுமி தான் இரண்டு வருடங்களாக ரவீந்தரை  காதலித்து தான் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்து இருந்தார். இது பலருக்கு வளஅதிர்ச்சியாக இருந்தது. இவர்கள் இருவருக்குமே இந்த திருமணம் இரண்டாவது திருமணம் தான்.


இவர்களுடைய திருமணத்திற்கு பிறகு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் இவர்களை சுற்றி பதிவிடப்பட்டன. ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருவரும் தங்களுடைய வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்கள்

தொடர்ந்து ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில்  பங்கு பற்றினார். இவர் வழமையாகவே பிக் பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விமர்சகராக காணப்பட்டார். இதனால் இந்த சீசனில் நீண்ட நாட்களுக்கு தாக்கு பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் யாரும் எதிர்பாராத நேரத்தில் முதலாவது வாரத்திலேயே வெளியே இருந்தார்.

இந்த நிலையில், ரவீந்தர்  வெளியிட்ட போஸ்ட் ஒன்று தற்போது வைரல் ஆகி வருகின்றது. அதில் பிக் பாஸ் ஒரு விளையாட்டு மட்டுமே ஆனால் உண்மையான காதல், வாழ்க்கை, உலகம் எல்லாமே என் பொண்டாட்டி தான் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement