• Feb 02 2023

பிக் பாஸ் ஜனனிக்கு அடித்த மாபெரும் அதிஸ்டம்! தளபதி 67 இல் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு

Listen News!
Jothika / 2 weeks ago
image

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் .இவரின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11 ஆந் தேதி வெளியாகி இருந்தது.இத்திரைப்படம் ரசிகர்களை மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது .

இதனைத்தொடர்ந்து தளபதி 67 படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்த்க்கது.

ஏற்கனவே மாஸ்டர் எனும் மிகப்பெரிய வெற்றியை இந்த கூட்டணி கொடுத்துள்ளதால், இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இத்திரைப்படத்தில்  திரிஷா, கவுதம் மேனன், மிஸ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிக் பாஸ் ஜனனி கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 6 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜனனி என்பது நாம் அறிந்ததே.

இவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தாலும், ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்டார்.



தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என செய்திகள் வெளிவந்துள்ளது.  படக்குழுவிடம் இருந்து வெளிவரும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக.பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement