• Apr 16 2024

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொருக்கும் துணிவு...எத்தனை கோடி தெரியுமா...?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அஜித்தின் துணிவு திரைப்படம் நாளுக்கு நாள் வசூலில் பல சாதனைகளை படைத்து கொண்டே உள்ளது.

தமிழகத்தில் துணிவு திரைப்படம் கடந்த 6 நாட்களில் ரூ. 75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என இதற்க்கு முன் வெளிவந்த செய்தியில் குறிப்பிட்டு இருந்தோம்.

ஆனால், தற்போது நமக்கு கிடைத்துள்ள நெருங்கிய வட்டாரத்தின் தகவலின்படி, கடந்த 6 நாட்களில் ரூ. 85 கோடிக்கும் மேல் தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாம் துணிவு.

எனினும் இதற்க்கு முன் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை 7 நாட்களில் ரூ. 82 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. ஆனால், தற்போது 6 நாளில் ரூ. 85 கோடி வசூல் செய்து வலிமை படத்தின் சாதனையை துணிவு படம் முந்தியுள்ளது.

அதுமட்டுமின்றி 6 நாட்களில் உலகளவில் ரூ. 150 கோடி வரை வசூல் செய்து மற்றொரு சாதனையை பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ளது.

அத்தோடு  வெளிநாட்டில் மட்டுமே இதுவரை ரூ. 45 கோடிக்கும் மேல் துணிவு திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவே அஜித்தின் சினிமா வாழ்க்கையில் சிறந்த வசூல் என்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement