• Apr 27 2024

யுவன் சங்கர் ராஜாவுடன் கூட்டணி அமைக்கும் பிக்பாஸ் ஐக்கி பெர்ரி- அடடே இது தான் விஷயமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் சீசன். இந்த நிகழ்ச்சியில் 5 சீசன்கள் வரை முடிவடைந்துள்ளதோடு தற்பொழுது 6வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இதுவும் தற்பொழுது 55 நாட்களைத் தாண்டி விட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்களைக் கவர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவர் மத்தியிலும் பிரபல்யமானவர் தான் ராஃப் பாடகி ஐக்கி பெர்ரி.


இவர் இதனைத் தொடர்ந்து தனது காதலனுடன் பிக்பாஸ் ஜோடிகள் என்னும் நிகழ்ச்சியிலும் பங்குபற்றி வந்தார்.இந்த நேரத்தில் தான் ஐக்கி பெர்ரி பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவுடன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். 

அதிலும் அவரது ஸ்டூடியோவிற்கு சென்று போட்டோ எடுக்க ஒருவேலை ஐக்கி பெர்ரி யுவன் இசையில் பாடப்போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் புகைப்படத்திற்கு பின்னால் இருக்கும் காரணம் எதுவும் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement