• Apr 19 2024

தளபதி 67 படத்தின் பூஜை முடிந்தது.. விக்ரம் பாணியில் வெளிவரவிருக்கும் டீசர்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். 


இவர் ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார்.


விஜயின் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். 


பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். இந்நிலையில் விஜய் நடிப்பில் அடுத்ததாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 67. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெறுகிறது. சென்னையில் உள்ள பிரபல ஏ.வி.எம் ஸ்டூடியோவில் தளபதி 67 படத்தின் பூஜை நடைபெறுகிறது.


ஆனால், இதுவரை எந்தெந்த நட்சத்திரங்கள் இப்படத்தின் பூஜையில் கலந்துகொண்டுள்ளார்கள் என்று தெரியவில்லை. இப்படத்தின் போட்டோஷூட் நாளை 06.12.2022 நடைபெறுகிறது. அதன்பின் 07.12.2022 - 09.12.2022 வரை இப்படதின் அறிவிப்பு டீசரின் படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிவிக்கின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement