• Feb 05 2026

சர்ச்சையில் கிக்கியுள்ள பிக்பாஸ் வீடு! உள்ளே செல்லவுள்ள ஜெயம் ரவி! கமலின் திடீர் முடிவிற்கு காரணம் என்ன?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீடு தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவில் சிக்கியுள்ளது. இந்த நேரத்தில், பிரபல நடிகர் ஜெயம் ரவி இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லவுள்ளார்.

இந்த வருடத்தில் வெளியான 'அகிலன்' 'இறைவன்' ஆகியவை  ஜெயம் ரவிக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்காத நிலையில், 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம்  மாபெரும் ஹிட் திரைப்படமாக மாறியது. 

இந்நிலையில் அடுத்த ஆண்டில் பிரதர், சைரன், ஜினி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' உள்ளிட்ட நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜெயம் ரவி.


அதிலும் குறிப்பாக உலக நாயகனின் "Thug Life" திரைப்படத்தில் அவர் இடம்பெற்றிருப்பது, ஜெயம் ரவி ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழலில் அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள சைரன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அந்த படத்தின் டீசர் குறித்த அப்டேட் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.


அதேவேளை, பிக் பாஸ் வீட்டிற்கு இன்றைய தினம் நடிகர் ஜெயம் ரவி உள்ளே செல்லவுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

அங்கு வைத்தே உலக நாயகன் கமல்ஹாசன், ஜெயம் ரவியின் சைரன் திரைப்படத்தின் டீசரை வெளியிடவுள்ளார் என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகிஉள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement