• May 04 2024

வாரிசு படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்...அடடே படம் மாஸ் தான் போல..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஐதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வாரிசு படத்தின் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள், வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் கசிந்து வருவதால் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன், ரொமான்டிக் படமாக உருவாகி வரும் வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம்,ஜெயசுதா, குஷ்பு, சங்கீதா கிருஷ், சம்யுக்தா, யோகிபாபு உள்ளிட்ட பல முக்கிய நட்ச்சத்திரங்கள்  நடித்து வருகின்றனர். எஸ்.ஜே.சூர்யாவும் மிக முக்கிய ரோலில் கெஸ்ட் ரோல் செய்வதாக கூறப்பட்டது.

எனினும் இந்த சமயத்தில் பிக்பாஸ் பிரபலமும், பிரபல நடிகருமான கணேஷ் வெங்கட்ராமனும் வாரிசு படத்தில் இணைந்துள்ளார். மேலும் இந்த தகவலை அவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.வாரிசு படத்திற்காக மேக்கப் போடும் வீடியோ தான் அவர் பகிர்ந்துள்ளார்.



பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கணேஷ் வெங்கட் ராமன்.மேலும் இவர் அபியும் நானும், உன்னை போல் ஒருவன், தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் பிரபலமான இவர் பெரும்பாலும் போலீஸ் ரோலிலேயே நடித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே வீடியோ மூலம் தான் வாரிசு படத்தில் நடிப்பதை தெரிவித்த கணேஷ், அந்த வீடியோவுடன், விஜய்யுடன் நடிப்பது த்ரில்லிங்காக, ஆர்வமாக உள்ளது. மேலும் இது மேக்ப் டைம் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். 



இதனால் இவர் என்ன ரோலில் நடிக்க போகிறார் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.விஜய்க்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ஆள் செம ஹைட், வெயிட்டாக உள்ளாரே. இந்த படத்திலும் போலீஸ் தானா என கேட்டு வருகின்றனர்.


அத்தோடு வாரிசு படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு தீபாவளிக்கே படத்தை ரிலீஸ் செய்து விடலாமா என படக்குழு ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement